நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | தக்லைப் படத்திலிருந்து மீண்டும் விலகினாரா ஜெயம் ரவி? | மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‛பைசன் காளமாடன்' | மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் |
மிஷ்கின் இயக்கிய 'முகமூடி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின்னர் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லை. ஹிந்தியில் ரித்திக் ரோஷன், தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள பூஜா ஹெக்டே, இப்போது சல்மான் கான் உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
'பாகுபலி' படத்தை தொடர்ந்து பிரபாஸ் தற்போது 'சாஹோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது. இந்த படம் முடிந்ததும் பிரபாஸ், ராதா கிருஷ்ண குமார் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படமும் தெலுங்கு ஹிந்தி என இரண்டு மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க நடிகை பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார்.