சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
நடிகர் பிரபாஸுக்கு கடந்த வருடங்களில் வெளியான ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்கள் பெரிய அளவில் கை கொடுக்காத நிலையில் சமீபத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான சலார் திரைப்படம் ஓரளவுக்கு டீசன்டான வெற்றியை பெற்றுத் தந்தது. இதைத் தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி ஏடி படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் இயக்குனர் மாருதி டைரக்ஷனில் உருவாகி வரும் ராஜா ஸாப் என்கிற படத்திலும் பிரபாஸ் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதுவரை சீரியஸான ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த பிரபாஸ் ஒரு மாறுதலாக இந்த படத்தில் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் கூட தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறாராம் நிதி அகர்வால். அது மட்டுமல்ல இன்னொரு கதாநாயகியாக மாளவிகா மோகனனும் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.