ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! | ‛ஜெயிலர் 2' சஸ்பென்ஸை உடைத்த சிவராஜ் குமார் | சாதனை விலைக்கு விற்கப்பட்டதா 'டாக்சிக்' வெளிநாட்டு உரிமை ? | மீனவர் பிரச்னையை தனித்துவமாக பேசும் 'வலை': இரட்டை வேடங்களில் நடிக்கிறார் அதர்வா | வையாபுரிக்கு ஜோடியான ‛பிக்பாஸ்' தாமரை | இளையராஜா இசையமைக்கும் ‛சைலப்பன் சைக்களிள் மார்ட்' | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் 17ம் தேதி ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் |

'உழைப்பே உயர்வுக்கு வழி' என்பது எக்காலத்திற்கும் பொருந்தும். ஒரு காலத்தில் தியேட்டரில் வாழைப்பழக் கடை நடத்தியவரின் மகன் இன்று பான் இந்தியா ஸ்டார் நடிக்கும் படத்தின் இயக்குனர் என்பது எவ்வளவு பெருமையான விஷயம்.
அப்படி ஒரு பெருமையைப் பெற்றுள்ளவர் இயக்குனர் மாருதி. இன்று டீசர் வெளியாகும் பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' படத்தின் இயக்குனர். இன்று டீசர் வெளியாவதை முன்னிட்டு காலையில் அவர் எக்ஸ் தளத்தில் தன்னைப் பற்றிப் பதிவிட்ட பதிவு ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
“மசூலிப்பட்டினம் - சிரி காம்ப்ளக்ஸ் (முன்பு கிருஷ்ண கிஷோர்).
இந்த இடத்தில்தான் எனது அப்பா சிறிய வாழைப்பழக் கடை ஒன்றை நடத்தி வந்தார்.
இந்தத் தியேட்டரில் வெளியாகும் எல்லா ஹீரோக்களின் படங்களின் பேனர்களுக்கும் நம்பிக்கையுடன் கனவு கண்டு எழுதுவேன்.
'ஒக்காசரைனா மன பெரு சூடலி இக்கடா' (ஒரு முறையாவது நம் பெயரை இங்கே பார்க்க வேண்டும்)' என்று விரும்பியவர்களில் நானும் ஒருவன்.
இப்போது இங்கே நின்று எல்லாம் எங்கிருந்து தொடங்கியது என்று திரும்பிப் பார்க்கிறேன்.
வாழ்க்கை முழு வட்டமாகிவிட்டது. இப்போது என் இந்திய நட்சத்திரத்தின் அருகில் ஒரு கட் அவுட்.
அது போதாதா?.
என் அப்பா இன்று மிகவும் பெருமைப்பட்டு இருப்பார். உங்களை மிஸ் செய்கிறேன் அப்பா. நான் இப்போது சுமக்கும் நன்றிக்கு மிகவும் சிறியதாக உணர்கிறேன்.
நமது காலத்தில், அனைத்து கடமைகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில்….
நான் இப்போதும் நம் அன்பை நான் கனவு கண்ட அம்சத்தில் முன் வைக்கிறேன். உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களும் தேவை,” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.




