விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் |
குறைந்த படங்களில் பணியாற்றினாலும், கவனிக்க வைக்கும் ஒளிப்பதிவை தருகிறவர்களை நட்சத்திர ஒளிப்பதிவாளர் என்பார்கள். பாலுமகேந்திரா, மது அம்பாட், பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்ட பல நட்சத்திர ஒளிப்பதிவாளர்கள்.
தமிழ் சினிமாவின் முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் கமல் கோஷ். இவர் மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவை சேர்ந்தவர். தமிழில் சினிமாக்கள் அதிகமாக வந்தாலும் இங்கு கதை எழுதவும், இசை அமைக்கவும், இயக்கவும் நிறைய பேர் இருந்தார்கள். ஆனால் தொழில்நுட்ப ரீதியான பணிகளுக்கு ஆட்கள் குறைவு, அதனால் மும்பை, கோல்கட்டாவில் இருந்து அழைத்து வரப்பட்டார்கள். அப்படி அழைத்து வரப்பட்டவர்களில் ஒருவர் கமல் கோஷ்.
அவரது கால்ஷீட்டிற்காக அன்றைய முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர்கள் காத்திருந்தார்கள். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பணியாற்றி உள்ளார். சில படங்களையும் இயக்கியும் உள்ளார்.
1936ம் ஆண்டு வெளியான 'பாலயோகினி' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். 1938ம் ஆண்டு ஆர். பிரகாஷ் இயக்கிய ஜூபிடர் பிக்சர்ஸ் திரைப்படமான 'அனாதை பெண்' படத்தில் பணியாற்றினார். தொடர்ந்து இன்றளவும் ஒளிப்பதிவிற்காக நினைவு கூறப்படுகிற 'ஹரிச்சந்திரா, கச்ச தேவயானி, சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள், அனார்கலி, காத்திருந்த கண்கள், அமரதீபவம்' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் கமல் கோஷ். 'பரமோபகாரம், ரோகினி, மனோரமா' ஆகிய 3 படங்களை இயக்கினார்.
தனது வாழ்நாள் முழுக்க கண்களை பிரதானமாக கொண்டு பணியாற்றிய கமல் கோஷ் 'கிளவுகோமா' என்ற கண்நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.