'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான கன்னடப் படம் 'காந்தாரா சாப்டர் 1'. பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படம் நான்கே நாட்களில் 300 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் நாள் வசூலைப் போலவே அடுத்தடுத்த நாட்களிலும் வசூல் சிறப்பாகவே இருந்துள்ளது. பண்டிகை நாட்கள் என்பதால் மக்கள் தியேட்டர்களில் அதிகமாகவே வந்து படத்தைப் பார்த்துள்ளார்கள்.
கடந்த வாரம் விடுமுறை நாட்கள் இருந்ததால் வசூல் மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இப்படம் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக வசூலித்து வருகிறது. இன்று முதல் வார நாட்கள் ஆரம்பமாகிறது. இந்த வார நாட்களிலும் வசூல் அதிகமாக இருந்தால் படம் விரைவிலேயே 'பிரேக் ஈவன்' ஆகிவிடும்.