மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

ஹனிப் அதேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன், சித்திக், ஜெகதீஷ் உள்ளிட்டோர் நடித்து கடந்தாண்டில் வெளியான மலையாளப் படம் 'மார்க்கோ'. அதிகமான வன்முறைக் காட்சிகள் இருந்ததால் இந்த படத்தை பலரும் விமர்சித்தனர். ஆனாலும் இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
மார்கோ இரண்டாம் பாகம் உருவாவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் மார்கோ இரண்டாம் பாகம் குறித்து உன்னி முகுந்தனுக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் அளித்த பதிலில், ‛‛மார்கோ 2ம் பாகம் உருவாகவில்லை. அந்த படத்தை சுற்றி ஏகப்பட்ட நெகட்டிவ் ஆன சூழல் நிலவியதால் இந்த படத்தை கை விடுகிறோம். ஆனால், மார்கோ 2 படத்தை விட வேறொரு சிறந்த படத்தை கொடுக்க விரும்புகிறேன். அது பெரிய படமாக, நல்ல படமாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.




