செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
பாலிவுட்டை போல தென்னிந்தியாவிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மலையாளத்தில் கடந்த ஆறு சீசன்களாக நடிகர் மோகன்லால் இந்த நிகழ்ச்சியை திறம்பட நடத்தி வருகிறார். ஏசியாநெட் சேனலில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது. இந்த நிலையில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஒரு புரோமோ வீடியோவுடன் அதை மோகன்லாலே தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மோகன்லால் தொடரும் படத்தில் இடம்பெற்றுள்ள அதே வேட்டி, சட்டை அணிந்து பைக்கில் பயணித்து வருவது போலவும் பைக்கில் இருந்து இறங்கி வேட்டியை மடித்து கட்டி 'வாடா' என்று அழைப்பது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இன்னும் சில தினங்களில் பிக்பாஸ் துவங்க இருக்கும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.