ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். அவருக்கு அடுத்தடுத்து 'இந்தியன் 2, தக் லைப்' என இரண்டு பெரிய தோல்விகள். தமிழ் சினிமாவின் உச்ச இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். அவருக்கு 'இந்தியன் 2, கேம் சேஞ்ஜர்' என அடுத்தடுத்து இரண்டு தோல்விகள். இந்தத் தோல்விகள் அவர்களை மட்டும் பாதிக்கவில்லை. தமிழ் சினிமாவையும் சேர்த்து பாதிக்க வைத்தது.
ஷங்கர், மணிரத்னம் ஆகியோருடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கூட்டணி அமைத்திருந்தார் கமல்ஹாசன். 1996ல் வெளிவந்த 'இந்தியன்' படத்திற்குப் பிறகு 28 ஆண்டு இடைவெளியில் ஷங்கருடனும், 1987ல் வெளிவந்த 'நாயகன்' படத்திற்குப் பிறகு 37 ஆண்டு இடைவெளியில் மணிரத்னத்துடனும் இணைந்த படங்கள் இப்படியொரு தோல்வியைத் தரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இதனால், ஷங்கர், மணிரத்னம், கமல்ஹாசன் ஆகியோரது அடுத்த படங்கள் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.
'இந்தியன் 2' வெளியீட்டிற்கு முன்னதாகவே 'இந்தியன் 3' குறித்த செய்திகள் வந்தன. பட வெளியீட்டிற்குப் பின்னர் 'இந்தியன் 3' குறித்து இதுவரையிலும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இன்னும் சில காட்சிகளை படமாக்க வேண்டிய உள்ளது என்று மட்டும் தகவல் வெளியாகி இருந்தது.
இப்போதுள்ள சூழ்நிலையில் 'இந்தியன் 3' படம் மீண்டும் ஆரம்பமாகுமா, அதை முடித்து வெளியிட சம்பந்தப்பட்டவர்கள் ஆர்வம் காட்டுவார்களா என்பது தெரியவில்லை. 'தக் லைப்' படத்தின் தோல்விக்குப் பிறகு அந்த ஆர்வம் நீடித்திருக்குமா என்பதும் புரியாத புதிர் தான்.
கமல்ஹாசனுக்கு அடுத்து ஒரு பிரம்மாண்ட வெற்றி தேவைப்படுகிறது. அந்த வெற்றிக்குப் பிறகு 'இந்தியன் 3' வருவதுதான் உகந்ததாக இருக்கும் என கோலிவுட்டில் நினைக்கிறார்கள். அப்படியே அது வெளிவந்தாலும் 'இந்தியன் 2' போன்ற 'டிரோல்' வராது என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. அது அவர்களது இமேஜை மேலும் பாதிக்கும்.
ஷங்கரும் அவரது அடுத்த கனவுப் படைப்பான 'வேள்பாரி' மூலம் மீண்டு வந்து அவருடைய இழந்த இமேஜைப் பெற முயற்சிப்பதுதான் சிறந்ததாக இருக்கும். அதுவரையில் 'இந்தியன் 3' படத்தைக் கொஞ்சம் தள்ளி வைப்பதே அவர்களுக்கும் இனிமையானதாகவே இருக்கும்.