ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

சமீபத்தில் மறைந்த ராஜேஷ் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். அவர் எல்லா படங்களிலுமே பாசிட்டிவான கேரக்டர்களில்தான் நடித்தார். 'அச்சமில்லை அச்சமில்லை' மாதிரியான சில படங்களில் நெகட்டிவ் ஷேட் உள்ள கேரக்டர்களில் நடித்தார்.
ஆனால் அவர் ஒரு ஆக்ஷன் படத்திலும் நடித்தார். அது 'ஜெயின் ஜெயபால்'. 'உயிருள்ளவரை உஷா' படத்தில் இடம்பெற்ற டி.ராஜேந்தரின் கேரக்டர் பெயர்தான் ஜெயின் ஜெயபால் அந்த கேரக்டரையே மெயின் கேரக்டராக்கி ராம நாராயணன் இயக்கிய படம்.
செய்யாத குற்றத்திற்காக சிறை சென்று திரும்பும் ராஜேஷ் தன்னை சிறைக்கு அனுப்பியவர்களை பழிவாங்குவது மாதிரியான கதை. வில்லனாக தேங்காய் சீனிவாசன் நடித்திருந்தார். இளவரசி, ராஜேஷ் ஜோடியாக நடித்திருந்தார்.
இவர்கள் தவிர ராஜீவ், ராஜ்குமார் சேதுபதி, சத்யராஜ், அனுராதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ராஜேசுக்கும், சத்யராஜுக்கும் அதிரடி சண்டை காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருந்தது. ஆனால் படம் வெற்றி பெறவில்லை.




