ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
மலையாளத்தில் நடிகர் திலீப், குடும்ப செண்டிமெண்ட், காமெடி, கொஞ்சம் ஆக்ஷன் என கலந்து தனக்கென ஒரு தனி ரூட்டில் தொடர்ந்து பயணித்து வருகிறார். இரண்டு மூன்று வருடங்களாக அவரது படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தாலும் அவரது 150வது படமாக வெளியான பிரின்ஸ் அண்ட் பேமிலி திரைப்படம் ஓரளவுக்கு வரவேற்பையும், வசூலையும் பெற்றது. இதனை தொடர்ந்து அவரது 151வது படமாக ‛பா பா பா' திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தை தனஞ்செய் சங்கர் என்பவர் இயக்கி வருகிறார். ஒரு அடார் லவ் படத்தில் நடித்த நூரின் ஷெரிப் மற்றும் அவரது காதல் கணவர் பாஹிம் சாபர் இருவரும் இணைந்து இந்த படத்திற்கான கதையை எழுதியுள்ளனர். இதற்கு முந்தைய பிரின்ஸ் அண்ட் பேமிலி படத்தில் திலீப்புடன் இணைந்து நடிகரும், இயக்குனருமான தியான் சீனிவாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது பா பா பா படத்திலும் அவர் திலீப் உடன் இணைந்து நடிக்கிறார்.
அவர் மட்டுமல்ல அவரது சகோதரரும் பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான வினித் சீனிவாசனும் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் கெஸ்ட் ரோலில் அல்லாமல் படம் முழுவதும் வருவது போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் டீசர் நகைச்சுவை மற்றும் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ளதை தெளிவுபடுத்தி உள்ளது. விரைவில் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.