பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

சினிமா உலகில் வயது அதிகமான நடிகர்களுக்கு, அவர்களது வயதை விட பாதி வயது குறைவான நடிகைகள் ஜோடியாக நடிப்பது அவ்வப்போது நடந்து வருகிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட சீனியர் நடிகர்களும், பாலிவுட்டில் உள்ள சில நடிகர்களும் இப்படியான சர்ச்சைகளில் அடிக்கடி சிக்குவது வழக்கம். சமீபத்தில் கூட ஹிந்தி நடிகர் சல்மான் ஜோடியாக ராஷ்மிகா நடித்த 'சிக்கந்தர்' படம் பற்றி இப்படி ஒரு சர்ச்சை எழுந்தது.
அடுத்து 40 வயதான ரன்வீர் சிங் ஜோடியாக 20 வயதே ஆன சாரா அர்ஜுன் ஜோடியாக நடிப்பது இப்போது சர்ச்சையை எழுப்பியுள்ளது. தமிழில் 'தெய்வ திருமகள், சைவம்' உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் இந்த சாரா. 'பொன்னியின் செல்வன்' படத்தில் இளம் பெண்ணாக நடித்திருந்தார்.
ஆதித்ய தர் இயக்கத்தில் சஞ்சய் தத், மாதவன், அக்ஷய் கண்ணா, உள்ளிட்டவர்களும் நடிக்கும் 'துரந்தர்' படத்தில்தான் ரன்வீர், சாரா ஜோடியாக நடித்து வருகிறார்கள். இப்படத்தின் முதல் பார்வை வீடியோவில் ரன்வீர், சாரா ஆகியோரின் காட்சிகள்தான் இந்த சர்ச்சையை ரசிகர்களிடம் எழுப்பியுள்ளன. இது குறித்து நிறைய நெகட்டிவ் கமெண்ட்டுகள் சமூக வலைத்தளங்களில் பதிவாகி உள்ளன.