ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

நடிகர் விஷ்ணு விஷால் மகளுக்கு மிரா என்று பெயர் வைத்துள்ளார் ஹிந்தி நடிகர் அமீர்கான். ஐதராபாத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு விஷ்ணு விஷால், ஜூவாலா கட்டா தம்பதியர் மகளுக்கு இந்த பெயரை சூட்டியுள்ளார். விஷ்ணு விஷாலும், அமீர்கானும் எப்படி பழக்கம். இருவரும் ஒன்றாக கூட நடித்தது இல்லையே என்று விசாரித்தால், தனது அம்மா ட்ரீட்மென்ட்டுக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் தங்கியிருந்தார் அமீர்கான். அப்போது 2023ல் சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட, அமீர்கான் தங்கியிருந்த சென்னை பழைய மகாபலிபுரம் வீடு பாதிக்கப்பட்டது.
அப்போது அவர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற விஷ்ணு விஷால் உதவி இருக்கிறார். அதிலிருந்து இரண்டு பேரும் நட்பாகி இருக்கிறார்கள். அந்த பழக்கத்தில் மனைவி, குழந்தை பேறு பிரச்னைகள் பற்றி அமீர்கானிடம் விஷ்ணு விஷால் விவரித்து இருக்கிறார். அதை கேட்டவர், மும்பைக்கு அவர்களை அழைத்து ஒரு நல்ல மருத்துவமனையில் ட்ரீட்மென்ட் எடுக்க சொல்லியிருக்கிறார்.
அந்த சமயத்தில் 10 மாதம் விஷ்ணு விஷால் மனைவியை மும்பையில் உள்ள அமீர்கான் அம்மா, சகோதரி கவனித்து இருக்கிறார்கள். அந்த பாசம், பிணைப்பில் குழந்தை பிறந்தவுடன் நீங்கதான் பெயர் வைக்கணும்னு என்று விஷ்ணு விஷால்-, ஜூவாலா தம்பதியர் கோரிக்கை வைக்க, அவரும் மும்பையில் இருந்து ஐதராபாத் வந்து மிரா என பெயர் சூட்டியிருக்கிறார்.




