ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தமிழ் சினிமாவில் நடிகை சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி ஷங்கர் உள்ளிட்ட ஹீரோயின்கள் டாக்டருக்கு படித்தவர்கள். அந்தவரிசையில் டாக்டருக்கு படித்த சிந்து பிரியா 'இவன் தந்திரன் 2' படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இவர் இதற்கு முன்பு மாஸ்டர், இந்தியன் 2 படங்களில் சின்ன வேடங்களில் நடித்தவர். வசந்த பாலனில் தலைமை செயலகம் வெப் சீரியலில் முக்கியமான வேடத்தில் வந்தவர். கராத்தேபாபு, கயிலன் படங்களில் நடித்து வருபவர்.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி நடித்த ‛இவன் தந்திரன்' படம் 2017ல் வந்தது. ஆனால், படம் வெளியான சில நாட்களில் சினிமா ஸ்டிரைக் அறிவிக்கப்பட, படத்துக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இப்போது பார்ட் 2 உருவாகிறது. முதல்பாகத்தில் நடித்த நடிகர்கள் யாரும் நடிக்கவில்லை. வட சென்னை, கேஜிஎப் படங்களில் நடித்த சரண் ஹீரோ. சிந்து பிரியா ஹீரோயின். முதல்பாகத்துக்கும் இதற்கும் தொடர்பு இருக்குமா என ஆர்.கண்ணன் விவரிக்கவில்லை. ஏன், கவுதம் கார்த்திக்கை நடிக்க வைக்கவில்லை என்றும் சொல்லவில்லை. இதில் நண்டு ஜெகன் காமெடி பண்ணுகிறார்.




