மணிரத்னம் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை |
பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர். 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கரீனா பாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக இருக்கிறார். தற்போது அவர் ஐ.நா சர்வதேச குழந்தைகள் நிதியத்தின் (யுனிசெப்) இந்திய தூதரா நியமிக்கப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் உரிமைகளுக்காக ஐ.நா. சர்வதேச குழந்தைகள் நிதியம் செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து கரீனா கபூர் கூறும்போது, “இந்த பொறுப்பை மிகுந்த கவுரவம் மற்றும் மிகுந்த பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக மிகவும் பொறுமையுடன், மனநிறைவாக வேலை செய்திருக்கிறேன். இதையடுத்து ஐ.நா சர்வதேச குழந்தைகள் நிதியத்தின் தேசிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளேன். இதனால் எனது பொறுப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இந்த பொறுப்பை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு, இந்தியாவின் எந்த பகுதியில் எந்த குழந்தை பாதிக்கப்பட்டாலும், அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், பேசக்கூடிய குழந்தையாக இருந்தாலும், அல்லது மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், அனைத்து குழந்தைக்கும் அவர்களது அடிப்படை உரிமை கிடைப்பதற்காக பாடுபடுவேன்” என்கிறார் கரீனா கபூர்.