அஜித், ஆதிக் இணையும் படம் : இந்த மாதம் அறிவிப்பு? | மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? | மலையாளத்தில் கல்யாணிக்கு நடந்தது : திரிஷா, நயன்தாராவுக்கு நடக்கலை | பார்த்திபன் இயக்கும் படத்தில் ‛லப்பர் பந்து' ஹீரோயின் | காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் |
தமிழ் சினிமாவில் இரண்டு முக்கியமான ரிலீஸ் நாட்களாக பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகை நாட்கள் அமையும். அந்த விதத்தில் இந்த வருட தீபாவளிக்கு கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நட்சத்திரங்கள் படம் எதுவும் வரவில்லை என்றாலும் வளரும் நட்சத்திரங்களின் படங்கள் அந்த போட்டியை ஏற்படுத்தி உள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள 'பைசன்', சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், அதுல்யா நடித்துள்ள 'டீசல்', விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், எஸ்ஜே சூர்யா, கிரித்தி ஷெட்டி நடித்துள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி', கீர்த்திஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் நடித்துள்ள 'டுயூட்', ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கவுதம் மேனன் நடிக்கும் 'கார்மேனி செல்வம்' ஆகிய படங்கள் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள இரண்டு படங்களான 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' மற்றும் 'டுயூட்' ஆகிய இரண்டு படங்களில் ஏதாவது ஒரு படம்தான் அன்றைய தினத்தில் வெளியாகும். மற்றொன்று தள்ளிப் போகும் எனத் தெரிகிறது. ஆனாலும், அது பேச்சு வார்த்தைக்குப் பிறகே முடிவாகும். இந்த 5 படங்களுடன் தீபாவளி வெளியீடு நிற்குமா அல்லது மேலும் சில படங்கள் போட்டியில் சேருமா என்பது போகப் போகத் தெரியும்.
ஒவ்வொரு படமும் வெளியீட்டிற்கு முன்பாக ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரிய நடிகர்களின் படங்கள் இல்லை என்றாலும் இந்தப் படங்களுடன் இந்த வருட தீபாவளி கொண்டாட்டம் சினிமாவில் சிறப்பாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.