டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' | நடிக்க வைப்பதை விட நடிப்பது கடினம் : பாலாஜி சக்திவேல் | பிளாஷ்பேக் : தமிழ் மக்களை டிஸ்கோ பைத்தியம் பிடிக்க வைத்த படம் | பிளாஷ்பேக் : நல்லதங்காள் போன்று பெண்களை கதற வைத்த 'பெண் மனம்' | நிஜ சிங்கத்துடன் நடித்த ஷ்ரிதா ராவ் | மோகன்லால், பஹத் பாசிலை பின்னுக்குத் தள்ளிய கல்யாணி பிரியதர்ஷன் |
நிஜ வாழ்க்கையில் மக்களுக்கு தன் உதவிகளின் ஹீரோவாக ஒலித்துக் கொண்டிருக்கும் பெயர் தான் பாலா. மக்களுக்கு ‛கலக்கப்போவது யாரு' பாலாவாக அறியப்படும் பாலன் ஆகாஷ், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 490 வாங்கியவர்; இதுவரை சிறு சிறு வேடங்களில் திரையில் தலை காட்டி கொண்டிருந்தவர் ; முதல்முறையாக ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். அவரிடம் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்தபோது....
* பிட்டாகி திடீர் என்று ஆளே மாறி விட்டீர்களே...
கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வருகிறேன். படம் துவங்கும்போது 50 கிலோ தான் இருந்தேன். இயக்குனர் கூறியபடி, நன்றாக சாப்பிட்டு 70 கிலோ அளவில் எடையை கேரக்டருக்காக கூட்டினேன்.
* ஹீரோவா நடிக்கும் போது மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற யோசித்ததுண்டா...
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது என் வாழ்க்கைக்கு தான் பொருந்தும். நான் எந்தப் பின்புலமும் இல்லாத சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன். ஒருபுறம் உழைப்பும், மறுபுறம் மக்களின் ஆதரவும் மட்டுமே என்னை அடுத்ததை நோக்கி ஓட வைக்கிறது.
* படத்திற்கு 'காந்தி கண்ணாடி' தலைப்பு ஏன்?
மகாத்மா காந்தி பத்தி ஒரு சின்ன ரெபரன்ஸ் மட்டுமில்லாது, காந்திக்கும் அவர் கண்ணாடிக்கும் என்ன ஆனது போன்ற பல விஷயங்கள் அடங்கிய படமாக இது இருக்கும். இயக்குநர் பாலாஜி சக்திவேல், காந்தி என்ற பெயர் கொண்ட கேரக்டரில் நடித்து உள்ளார். அவர் மனைவியாக நடித்துள்ள அர்ச்சனா உடனான காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. இயக்குநர் ஷெரீப், 'ரணம்' படத்திற்கு பிறகு சொன்ன மூன்று கதைகளில் இக்கதை கேட்ட உடனே பிடித்து விட்டது. காந்தி கண்ணாடி, மனதிற்கு நெருக்கமான 'பீல் குட்' படமா இருக்கும்.
* சிவகார்த்திகேயனின் படம் வெளியாகும் செப்.5ல் அதே தேதியில் உங்கள் படமும் வருகிறதே
உண்மையில் திட்டமிட்டு எதுவும் நடக்கவில்லை; படத்தின் ரிலீஸ் தேதி தானாக அமைந்தது. அவரது படத்திற்கு டிக்கெட் கிடைக்காத பத்து பேர்களாவது நம் படத்திற்கு வருவார்கள் என்கிற சின்ன நம்பிக்கை தான்.
* மக்களுக்கு ஆம்புலன்ஸ், வீடு, ஆட்டோ வாங்கித் தருவது போன்ற நல்ல விஷயங்கள் செய்கிறீர்கள். இதற்கு யாராவது உதவுகிறார்களா?
இதுவரை யாரிடமும் ஒரு ரூபாய் கூட வாங்கியதில்லை. நிறைய வெளிநாடு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, தொகுத்து வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளில் கிடைக்கும் வருமானத்தின் மூலமே உதவி செய்கிறேன். மற்றவர்களிடமிருந்து வாங்கி உதவி செய்வதற்கு நாம் எதற்கு. அவர்களே உதவி செய்வார்களே.
* வருமானத்தில் பெரும் பகுதியை நலத்திட்ட உதவிகளாக செய்வதற்கு வீட்டில் ஆதரவு உண்டா
என் தாத்தா எப்போதும் என்னிடம், பைத்தியக்காரன் பேச்சை கூட நம்பலாம்; சொந்தக்காரன் பேச்சைக் கேட்டு விடாதே என்பார். அவர் கூறியது போலவே, சொந்தக்காரர்கள் உங்கள் பையன் தனக்கு சேமிப்பு எதுவும் இல்லாமல் இப்படியே செலவு பண்ணிட்டு இருக்கிறான் என குறை கூறினார்கள். அவர்களுக்கு என் அப்பாவின் பதில் இது தான், 'என் பையன் குடித்து விட்டு ஊதாரியாக செலவு செய்யவில்லை; நான்கு பேர்களுக்கு உதவிதானே செய்யட்டுமே!'
* நீங்கள் செய்யும் நல்ல விஷயங்களை பார்த்து திரைத்துறையில் இருந்து யாராவது பாராட்டி இருக்கிறார்களா
ராகவா லாரன்ஸ் பாராட்டி இருக்கிறார். விஜய் சேதுபதி உடன் ஜூங்கா படத்தில் நடித்தேன். அப்போது இருந்தே அவருடைய அன்பிற்கு உரியவனாக இருந்து வருகிறேன்; எதாவது செய்திகளில் பார்த்தால் கூட போன் செய்து பாராட்டுவார்.
* சினிமாவிற்கு வந்த பிறகு சிலருக்கு அரசியல் ஆசை வரும். நீங்கள் எப்படி
அரசியலுக்கு நிறைய படிப்பறிவு தேவை. இப்ப நடக்கும் அரசியலில் எதுவும் தெரியாத அளவில் தான் உள்ளேன். எனக்கு தெரிந்த அரசியல் ஒன்றே ஒன்று தான். நான் வாங்கும் சம்பளத்தில் 85 சதவீதம் மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும்; மற்றவற்றில் ஆர்வமில்லை.
* பாலா இனிமேல் ஹீரோவா மட்டும் தான் நடிப்பாரா?
இதுவரை 18 படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்துள்ளேன். அதில் 11 படத்தில் என் காட்சிகளே இருக்காது. இவன் நடித்தால் மக்களுக்கு தெரியுமா, ஒல்லியா இருக்கிறானே, யாரு ரசிப்பார்கள் என்பார்கள். சோர்ந்து போயிருந்த என்னை ஆர்.ஜே.பாலாஜி ஊக்கப்படுத்தி மீண்டும் நடிக்க துாண்டினார். மனதிற்கு பிடித்த நல்ல கதைகளில் மட்டுமே நடிக்க வேண்டும் என உள்ளேன். நம்பி பார்க்கலாம் என, மக்கள் ரசிக்கும் அளவிற்கு நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்றார்.