பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் |
கேபிஒய் பாலா ஹீரோவாக அறிமுகம் ஆகும் ‛காந்திகண்ணாடி' படத்தின் சிறப்பு காட்சி சென்னையில் நேற்று நடந்தது. அதில் பாலா நண்பர்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். படம் பார்த்துவிட்டு ம.கா.பா ஆனந்த் பேசுகையில் ''முதல் படத்திலேயே இப்படியொரு நல்ல படம் பாலாவுக்கு கிடைத்தது. இந்த படத்தில் தொடர்ந்து சிரிக்க வைத்தார்கள், அப்புறம் யோசிக்க வைத்தார்கள். கடைசியில் அழ வைத்து விட்டார்கள். பணத்துக்காக எதையும் இழக்காதீர்கள், உறவுகளை மதியுங்கள் என்ற கரு நல்லா இருக்குது'' என்றார்.
விஜய் டிவி பிரியங்கா பேசுகையில், ‛‛அவனின் ஆரம்ப கால வாழ்கையில் இருந்து இப்போதுவரை பார்த்து இருக்கிறேன். இந்த படத்தை பார்க்கையில் அவ்வளவு சந்தோசம். சினிமாவிலும் கூட இருப்பவர்களுக்கு உதவுகிறார். அவன் நல்லவன் என்பதை படம் பார்க்கும்போது தெரிகிறது. என்னை ஒரு கட்டத்தில் அவன் அழ வைத்துவிட்டான். அமுதவாணன் அண்ணனும் படத்தில் இருக்கிறார்'' என்றார்.
அமுதவாணன் பேசுகையில் ''சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி இந்த இடத்துக்கு வந்து இருக்கிறார் பாலா. எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி'' என்றார்.
பாலா பேசுகையில் ‛‛ஒன்றே கால் ஆண்டுகளாக கஷ்டப்பட்டு போராடி காந்திகண்ணாடியை எடுத்தோம். நான் இங்கே இருக்க முக்கிய காரணம், தமிழ் மக்கள் போட்ட பிச்சை. நான் இன்று ரொம்பவே எமோசனாக இருக்கிறேன்'' என்றார்.