சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு | நடிகை ரம்யா மீது அவதூறு தாக்குதல் : இதுவரை நடிகர் தர்ஷினின் 12 ரசிகர்கள் கைது | மலையாள திரையுலகை பிடித்து ஆட்டும் கேமியோ ஜுரம் | முதலில் ‛பியார் பிரேமா காதல்' இப்போது ‛பியார் பிரேமா கல்யாணம்' |
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால் நடித்துள்ள ‛மதராஸி' படம் செப்., 5ல் ரிலீஸாகிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவுக்காக கோவை எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரிக்கு வந்திருந்தார் சிவகார்த்திகேயன். உடன் நடிகை ருக்மணி வசந்தும் இருந்தார். சிவகார்த்திகேயனை பார்த்ததும், மாணவிகள் தங்கள் 'வழக்கமான பயனுள்ள' கேள்விக்கணைகளை வீச ஆரம்பித்து விட்டனர்.
* உங்கள் கல்லுாரி காலத்தை பற்றி சொல்லுங்களேன்?
எனக்கு கல்லுாரிக்கு முன் கல்லுாரிக்கு பின் என, இரண்டு வாழ்க்கை இருக்கிறது. இது போன்ற கல்லுாரி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது, அந்த ஞாபகங்கள் வந்து விடும். நான் கல்லுாரியில் படித்த காலம் அவ்வளவு மகிழ்ச்சியான காலம். எந்த கல்லுாரிக்கு போனாலும் எங்கள் காலேஜ் கல்ச்சுரல்ஸ் ஞாபகத்துக்கு வரும்.
கல்லுாரியில் படிக்கும் போது கிடைக்கும் அனுபவமும், மகிழ்ச்சியும் அதற்கு பின் கிடைக்காது. அப்போது கிடைக்கும் நண்பர்கள்தான், உண்மையான நண்பர்கள். இன்றைக்கு உங்கள் முன் மேடையில் நிற்கிறேன் என்றால், அதற்கு என் கல்லுாரி நண்பர்கள்தான் காரணம். என்னுடைய சினிமா வாழ்க்கைக்கு பின்னால், இப்போதும் என்னுடைய கல்லுாரி நண்பர்கள்தான் உள்ளனர். என் வாழ்க்கையில் இந்த அளவுக்கு மாற்றங்கள் ஏற்பட அவர்கள்தான் காரணம். அதனால் காலேஜ் லைப்பை மட்டும் யாரும் மிஸ் பண்ணிடாதீங்க, நல்லா என்ஜாய் பண்ணுங்க.
* உங்களிடம் ஒரு மேஜிக் ரிமோட் கிடைத்தால், உங்கள் லைப்பில் நடந்த, எந்த மோமென்டை ரீவைண்ட் செய்து பார்ப்பீர்கள்?
நான் கல்லுாரியில் படித்த காலத்தில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு, பாடத்தை கவனிக்காமல் ஜாலியாக நண்பர்களுடன், கமென்ட் அடித்து கலாய்த்து கொண்டிருந்த மோமென்டைதான், ரீவைண்ட் செய்து பார்ப்பேன்.
* உங்களுக்கு பிடித்த இயக்குனர் யார் ?
இயக்குனர்களை பொறுத்தவரை, இவர்தான் என்று குறிப்பிட்டு ஒருவர் இருவரை சொல்ல முடியாது. நிறைய பேர் உள்ளனர். எல்லா இயக்குனர்களிடம் இருந்தும் நல்ல விஷயங்களை கற்று இருக்கிறேன்; பெற்று இருக்கிறேன்.
* நீங்கள் நடிக்கும் படங்களில் 'லவ்' அல்லது 'ஆக் ஷன்' இதில் எது அதிகம் பிடிக்கும்?
ஆக் ஷன் படங்களில் நடித்தால் உடம்பு வலிக்கும். காதல் படங்களில் நடித்தால் மனசு வலிக்கும். இவை இரண்டும் இருந்தால் பாடி பெயின், ஹார்ட் பெயின் ரெண்டும் இருக்கும்.
* உங்களுக்கு பிடித்த ஹீரோ யார் ?
எனக்கு பிடித்த ஹீரோ எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினி தான். அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன், மோட்டிவ் எல்லாம். அவருடைய வாய்ஸ்சை மிமிக்ரி செய்துதான், நிறைய கைதட்டல்கள் வாங்கினேன். அவரை பார்த்துதான் சினிமா பிடித்தது, சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அதில் இருந்துதான் எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நல்ல சம்பளம் கிடைத்தது. எல்லாம் அவரால்தான்.