ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
ராதே ஷ்யாம் படத்தை அடுத்து சலார், ஆதி புருஷ் போன்ற படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ். மேலும் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுக்கு சுவையான மதிய உணவுகள் அனுப்பி வைப்பதை அவர் வழக்கமாக வைத்திருக்கிறார். இதை அவருடன் இணைந்து நடித்துள்ள பூஜா ஹெக்டே, ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தநிலையில் பாலிவுட் நடிகையான கரீனா கபூருக்கு பிரியாணி அனுப்பி வைத்த அவருக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் பிரபாஸ். அதையடுத்து, பாகுபலி நீங்கள் அனுப்பிய சிறந்த உணவுக்கு நன்றி என்று தெரிவித்துள்ள கரீனா கபூர், பிரபாஸ் அனுப்பிய உணவை படமெடுத்து அதில் நன்றி தெரிவித்துள்ளார். கரீனா கபூரின் கணவரான சைப் அலிகான் தற்போது பிரபாசுடன் இணைந்து ஆதிபுருஷ் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.