விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! |

கடந்த இரண்டு வருடங்களுக்குள் நடிகர் விஜய்சேதுபதியின் வளர்ச்சி ரொம்பவே அபரிமிதமானது தமிழ் நடிகர் என்பதை தாண்டி தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து தென்னிந்திய நடிகர் என பெயர் பெற்ற விஜய்சேதுபதி தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்து பான் இந்தியா நடிகராக மாறியுள்ளார். அந்த வகையில் ஒரே சமயத்தில் மூன்று இந்தி படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதில் பாலிவுட் முன்னணி நடிகை கரீனா கபூருக்கு ஜோடியாக நடிக்கும் மேரி கிறிஸ்துமஸ் படமும் ஒன்று.
இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் இந்தப்படத்தில் விஜய்சேதுபதி தற்போது நடிக்கும் கதாபாத்திரத்தில் முதன்முதலில் சல்மான்கான் தான் நடிப்பதாக இருந்தது. அவருக்கு கதை பிடித்து விட்டாலும் கூட, தன்னை போன்ற ஒரு மாஸ் ஹீரோ நடிகர் நடிக்கும் அளவிற்கு படம் பெரிதாக இல்லை என்பதால் இந்தப்படத்தில் நடிக்க தயக்கம் காட்டி ஒதுங்கிக் கொண்டாராம். அதேசமயம் ஸ்ரீராம் ராகவனுடன் வரும் காலங்களில் கமர்ஷியலான ஒரு படத்தில் இணைந்து நடிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளாராம் சல்மான்கான்.