பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் அப்டேட் நாளை(இன்று) வெளியாகும் என்று நேற்று நடிகர் விக்ரம் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருந்த நிலையில், இன்று(மே 6) அந்த படத்தின் டைட்டில் போஸ்டரை இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில், இந்த படத்திற்கு பைசன் காளமாடன் என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு கால்நடையாய் நடந்து வாரான் காளமாடன், அவன் கார்மேகம் போல வாரான் காளமாடன் என்ற கேப்ஷனையும் அவர் பதிவிட்டுள்ளார். இப்படத்தில் துருவ் விக்ரமுடன் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நாயகிகளாக நடிக்க, பசுபதி, லால், கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்க, எழிலரசு ஒளிப்பதிவு செய்கிறார். திலீப் சுப்பராயன் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றுகிறார்.