'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் ‛தக் லைப்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட கமல்ஹாசன், அதையடுத்து தேர்தல் பிரச்சாரங்களில் இறங்கி விட்டதால் அப்படத்தில் கமிட்டாகி இருந்த ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் கால்சீட் பிரச்சினையால் வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் அதையடுத்து மீண்டும் அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை தக்லைப் படத்தில் இணைத்து விட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஜெயம் ரவி நடிக்க இருந்த வேடத்தில் அசோக் செல்வன் கமிட்டாகி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதைவைத்து பார்க்கும் போது தக்லைப் படத்தில் இருந்து வெளியேறிய ஜெயம் ரவி மீண்டும் அப்படத்தில் இணையவில்லை என்பது தெரியவந்துள்ளது. அந்த வகையில் தக்லைப் படத்தில் கமலுடன் சிம்பு, அரவிந்த்சாமி, அசோக் செல்வன் என பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள்.