நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தமிழில் அறிமுகமாகி தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரெஜினா கசாண்ட்ரா. தற்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த 'பார்சி' தொடரில் ரேகாவாகவும், 'ராக்கெட் பாய்ஸ்' தொடரில் மிர்னாலினி சாராபாய் பாத்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது விடாமுயற்சி, பிளாஷ்பேக், பார்டர் படங்களில் நடித்து வருகிறார்.
ரெஜினா திரைத்துறை மட்டுமின்றி சமூக பணிகளிலும் தொடர்ந்து ஆர்வம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் கடற்கரையையும், கடலையும் சுத்தம் செய்யும் பணியில் ரெஜினா ஈடுபட திட்டமிட்டிருக்கிறார். இதற்காக அவர் எஸ்யூபி மெரினா கிளப் குழுவினருடன் இணைந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது “ எனக்கு கடலும், கடற்கரையும் பிடித்தமான இடங்கள். அவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று எப்போதும் நினைப்பேன். அதை செயல்படுத்தும் விதமாக மெரினா கிளப் குழுவினரோடு இணைந்து கொண்டேன். கடற்கரை மற்றும் நீர்நிலைகளை குப்பை கிடங்காக மாற்றிவிட கூடாது என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. சுற்றுச்சூழலில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். நீர் நிலைகள் நமக்கு அத்தியாவசியமானவை, அதை கலங்கடிக்க வேண்டாம். இந்த பணி மிகவும் தேவையான ஒன்று என நினைத்தேன். இந்த குழுவினரோடு இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.