சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' | 'பெருசு' முதியவர்களை பெருமைப்படுத்தும் | தாய்மாமன் உறவை பேசும் மாமன் படம் : கோடையில் ரிலீஸ் | பிளாஷ்பேக் : 'டிக் டிக் டிக்' படத்தால் சர்ச்சையில் சிக்கிய பாரதிராஜா | பிளாஷ்பேக் : தியேட்டர்களை கோவிலாக மாற்றிய நந்தனார் | பள்ளி ஆசிரியர்களே என் உயர்வுக்கு காரணம் : பழைய நினைவுகளை பகிர்ந்து நடிகர் ரஜினி உருக்கம் | புரமோஷன் நிகழ்ச்சியில் உற்சாகத்தை அடக்க முடியாமல் துள்ளல் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கு திரையுலகில் உள்ள முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு எல்லாம் தவறாமல் இசையமைத்து வருபவர் இசையமைப்பாளர் தமன். ஒவ்வொரு ஹீரோவுக்கும் சொல்லிக் கொள்ளும்படியாக ஒவ்வொரு படத்திலும் ஒரு ஹிட் பாடலாவது கொடுத்து விடுவதால் பிஸியாக இசையமைத்து வரும் தமன், தற்போது பிரபாஸ் நடித்து வரும் ராஜா ஸாப் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். பொதுவாக பாடல்களை உருவாக்குவதற்காக வழக்கமாக பணியாற்றும் ஐதராபாத் சுற்றுப்பகுதி இடங்களுக்கோ அல்லது துபாய் போன்ற வெளிநாடுகளுக்கோ செல்வதுதான் தமனின் வழக்கம்.
ஆனால் இந்த முறை பாடல் கம்போசிங்கிற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ளாராம் தமன். இது தெலுங்கு திரையுலகில் மட்டுமல்லாது ரசிகர்களிடையேயும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனர் மாருதி இயக்கும் இந்த படத்தில் கதாநாயகிகளாக நித்தி அகர்வால், மாளவிகா மோகனன் ஆகியோர் நடிக்கின்றனர் என்பதும் ராதே ஷ்யாம் படத்திற்குப் பிறகு மீண்டும் பிரபாஸ் படத்திற்கு தமன் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.