டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் பான் இந்தியா நடிகராக உயர்ந்தார் பிரபாஸ். அதன்பின் அவர் நடிப்பில் உருவான படங்கள் பான் இந்தியாவாக வெளிவந்தன. இருப்பினும் பாகுபலி அளவுக்கு சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்கள் வெற்றி பெறவில்லை. கடைசியாக வந்த சலார் ஓரளவுக்கு வசூலை தந்தன. தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 ஏடி என்ற சயின்ஸ் பிக்ஷன் படமாக பிரமாண்டமாய் உருவாகி வருகிறது.
இதையடுத்து அர்ஜூன் ரெட்டி, அனிமல் படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சந்தீப் ரெட்டி வங்கா அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, "பிரபாஸை வைத்து நான் இயக்கவுள்ள படத்தின் பெயர் 'ஸ்பிரிட்'. இதில் பிரபாஸ் நேர்மையான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இதன் பட்ஜெட் மட்டும் ரூ.300 கோடி செலவில் உருவாகிறது. இந்த பட்ஜெட்டை வெறும் சாட்லைட், டிஜிட்டல் உரிமத்தின் மூலமே தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும். படத்தின் முதல்நாள் வசூலே ரூ.150 கோடி இருக்கும்" என தெரிவித்துள்ளார்.




