ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
பாகுபலி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் முன்னணி நட்சத்திரமாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் மாறிவிட்டார் நடிகர் பிரபாஸ். அந்த படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவினாலும், சமீபத்தில் வெளியான அவரது சலார் திரைப்படம் ஆவேரேஜான வரவேற்பை பெற்றாலும் கூட பிரபாஸுக்கான கிரேஸ் மற்றும் வியாபார மதிப்பில் எந்த சரிவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் அடுத்ததாக கல்கி படத்தில் நடித்து வரும் பிரபாஸ், அடுத்ததாக ஸ்பிரிட் உள்ளிட்ட சில படங்களில் நடிக்க இருக்கிறார்.
இடையில் ஓய்வுக்காகவும் மருத்துவ சிகிச்சைகளுக்காகவும் அவ்வப்போது லண்டன் சென்று வருகிறார் பிரபாஸ். அங்கே செல்லும்போதெல்லாம் அவர் வழக்கமாக வாடகைக்கு ஒரு மிகப்பெரிய பங்களா ஒன்றை தேர்வு செய்து தங்கி வந்தார். இந்த நிலையில் தற்போது அந்த பங்களாவையே விலை கொடுத்து வாங்கி தனக்கு சொந்தமாக்கியுள்ளாராம் பிரபாஸ். இதை அடுத்து தனது டேஸ்ட்டுக்கு ஏற்றவாறு அந்த பங்களாவில் சில புதிய வேலைப்பாடுகளையும் பிரபாஸ் செய்து வருகிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.