நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

20, 30 வருடங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படங்களை ரீமேக் செய்வதும் அதன் இரண்டாம் பாகங்களை எடுப்பதும் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. இன்னொரு பக்கம் சிலர் அப்படி தங்களது ஹிட் படங்களை ரீ ரீலீஸ் செய்து அதன் மூலமும் வசூல் ஈட்டி வருகின்றனர். அந்த வகையில் பார்த்திபன் நடிப்பில் கடந்த 22 வருடங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த அழகி திரைப்படம் தற்போது மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்த்திபனிடம் உங்களுடைய புதிய பாதை படத்தையும் இதே போல ரீ ரிலீஸ் செய்வீர்களா என்கிற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த பார்த்திபன், “என்னுடைய புதிய பாதை படத்தை ரீ ரிலீஸ் செய்யாமல் அதையே மீண்டும் படமாக எடுக்கப் போகிறேன். 33 வருடங்கள் கழித்து மீண்டும் நானே ஹீரோவாக நடித்து அந்த படத்தை ரீமேக் செய்யப் போகிறேன். அதற்கு 'டார்க் வெப்' என்று பெயர் வைத்துள்ளேன். என்னுடைய 'டீன்ஸ்' படம் வெளியான பிறகு அந்த படத்திற்கான வேலைகளை ஆரம்பிப்பேன்” என்று கூறியுள்ளார்.