‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் | தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம் | கனா தர்ஷனின் புதிய பட அறிவிப்பு | இளம் நாயகிகளும் பொறாமைப்படும் 'மார்கண்டேயினி' த்ரிஷா | தமிழ் ரசிகர்களைக் கவராத 'புஷ்பா… புஷ்பா…' | 'சலார்' டிவி ஒளிபரப்பு : அதிர்ச்சி தந்த டிஆர்பி ரேட்டிங் | யஷ் படத்திலிருந்து கரீனா கபூர் விலகல்? | அண்ணாமலை பயோபிக் : தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆர்வம் | ப்ளடி பெக்கராக மாறிய கவின் |
மெட்ராஸ் படத்திற்கு பிறகு கடம்பன் படத்தில் நடித்த கேத்ரின் தெரசா தற்போது கதாநாயகன் படத்தில் நடித்து வருகிறார். ஆனால் தெலுங்கில் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் கிளாமரில் லிமிட் தாண்ட மாட்டேன் என்று கண்டிசன் போட்டு நடித்த அவர், தற்போது தெலுங்கில் வெளியாகியுள்ள கெளதம் நந்தா படத்தில் பிகினி உடையணிந்து நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறாராம்.
மேலும், கோபிசந்த் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஹன்சிகாவும் இன்னொரு நாயகியாக நடித்திருக்கிறார் என்ற போதும் தனது கேரக்டர் தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்தமான கிளாமர் ரோல் என்பதால் ஹன்சிகா அந்த படத்தில் இருப்பதைப்பற்றி கவலைப்படாமல் நடித்திருக்கிறார் கேத்ரின். விளைவு, கடந்த 28-ந்தேதி வெளியாகியுள்ள கெளதம் நந்தா படத்தில் கேத்ரின் தெரசா பிகினி உடையணிந்து திரையில் தோன்றும்போது தியேட்டர்களில் விசில் பறக்கிறதாம். இதனால் ஏகபோக மகிழ்ச்சியில் இருக்கும் கேத்ரின்,அடுத்தபடியாக முழு கமர்சியல் நடிகையாக உருவெடுக்க தீவிரமாக கதைகள் கேட்கத் தொடங்கியிருக்கிறாராம்.