அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா |

நடிகை ஹன்சிகா சோலோ ஹீரோயினாக நடித்துள்ள தெலுங்கு படம் 'மை நேம் இஸ் ஸ்ருதி'. ஸ்ரீனிவாஸ் ஓம்கார் இயக்கி உள்ளார். முரளி சர்மா, ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி உள்ளது.
ஹன்சிகா கூறியிருப்பதாவது: தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தியதால் தெலுங்கு படம் பற்றி கவனிக்கவில்லை. அங்கிருந்தும் எனக்கான ஸ்கிரிப்டும் வரவில்லை என்பதும் உண்மை. இந்த படத்தின் கதையை இயக்குனர் சொன்னதும் நடிக்க பயந்தேன். மனிதர்களை கடத்தி அவர்களின் தோலை வியாபாரம் செய்வார்களா என்ற சந்தேகம் இருந்தது. எனது தாய் அடிப்படையில் மருத்துவர் என்பதால் அவர் அது உண்மைதான். அது இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்றார். அதன் பிறகே நடித்தேன்.
படத்தில் நான் ஒரு விளம்பர ஏஜென்சி நடத்தும் பெண். சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த கடத்தல் கும்பலிடம் சிக்கி விடுகிறேன். அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறேன். அந்த கும்பலை எப்படி சமூகத்துக்கு அடையாளம் காட்டுகிறேன் என்பதுதான் படத்தின் கதை. எனக்கு ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது. அது ஹீரோக்கள் போடும் சண்டை போன்று இருக்காது. என் வயது கொண்ட எனது வலிமை கொண்ட ஒரு பெண் எப்படி சண்டையிடுவாளோ அதுபோன்று யதார்த்தமாக இருக்கும். என்றார்.