அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா |
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் 'இது காதல் வரும் பருவம்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் அரிஷ் குமார். பிரபல படத்தொகுப்பாளர் கணேஷ் குமாரின் மகன். மாத்தியோசி, கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, மிக மிக அவசரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன் பிறகு வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். தற்போது இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், ஜெய், தான்யா ஹோப் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'லேபிள்' என்ற வெப்சீரிஸில் டெரர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
அரிஷ் கூறியிருப்பதாவது : ‛‛ 'லேபிள்' என்றால் ஒரு அடையாளம். ஒரு பிராண்ட். அந்த வகையில் இந்த லேபிள் மூலம் நான் ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்வேன். கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க துவங்கியிருக்கிறேன். இந்த இடைவெளி கூட எனது தவறினால் நிகழ்ந்தது தான். நாம் தட்டும் எல்லா கதவும் நமக்காக திறக்கப்படும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஏதோ ஒரு கதவு திறக்கும். தட்டுவதை மட்டும் நாம் நிறுத்தக்கூடாது என்பதை புரிந்து கொண்டேன்.
லேபிள் வெப் சீரிஸில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கண்ணதாசன் படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் என வந்து கதை சொன்னார்கள். எனக்கே அது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இரண்டிற்குமே நடிப்பிலும் தோற்றத்திலும் வித்தியாசம் காட்டி இருக்கிறேன். பொதுவாகவே ஒரு நடிகருக்கு போலீஸ் படங்கள் அவரை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் என்பார்கள். நாமும் நிறைய பார்த்திருக்கிறோம். என்னுடைய திரையுலக பயணத்திலும் அந்த மேஜிக் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்.
கண்ணதாசன் படத்தை தொடர்ந்து இன்னொரு வெப் சீரிஸிலும் நடிக்கிறேன். அதற்கான படப்பிடிப்பும் துவங்கி விட்டது. இனி கதைக்காக காத்திருப்பது, நல்ல படத்திற்காக காத்திருப்பது என்பதைத் தாண்டி கிடைக்கிற வாய்ப்பில் எப்படி கோல் அடிப்பது என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். தொலைத்த இடத்தில் தான் தேட முடியும் என்பார்கள். இப்போது நானே என்னைத் தேடிக் கண்டுபிடித்து இருக்கிறேன்,'' என்றார்.