''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
பழம்பெரும் நடிகரும், எம்.ஜி.ஆரின் மெய்காப்பாளருமான ஜஸ்டினின் மகள் பபிதா. பாக்யராஜின் ‛சின்ன வீடு' படத்தில் நடித்து பிரபலமானார். பவுனு பவுனுதான், பூவே பூச்சூடவா, மங்கை ஒரு கங்கை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். பெரும்பாலும் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் அதிமுகவில் சேர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். இப்போதும் அதிமுகவில்தான் இருக்கிறார்.
அவரது மகள் ஹரிஷ்தா தற்போது நடிக்க வந்திருக்கிறார். பல படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும், 'அழியாத கோலங்கள் 2' படத்தை இயக்கியவருமான எம்.ஆர்.பாரதி இயக்கும் 'ட்ரீம் கேர்ள்' என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஜீவா என்ற புதுமுகம் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஊட்டியில் 24 நாட்களில் நடந்து முடிந்திருக்கிறது.
படம் பற்றி இயக்குனர் எம்.ஆர்.பாரதி கூறும்போது, “இது எளிமையான காதல் கதை. 4 கேரக்டர்கள் மட்டுமே படத்தில் இடம் பெறுகிறார்கள். நாயகனும், நாயகியும் தீவிரமாக காதலிப்பார்கள். அவர்களின் காதலுக்கு எதிரி அவர்கள் காணும் கனவுதான். அந்த கனவில் அவர்களுக்கு இன்னொரு காதல் வருகிறது. எது நிஜம், எது கனவு. எது சரி, எது தவறு என்று தவிப்பார்கள். முடிவு என்ன என்பதை சுவையாக சொல்லும் படம். படத்தின் படப்பிடிப்பு நடந்தபோதுதான் ஒரு நாள் நான் பபிதாவின் மகள் என்பதை என்னிடம் சொன்னார். நல்ல திறமையான நடிகையாக வலம் வருவார். என்றார்.