2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ஒருகாலத்தில் குட்டி குஷ்பு என்று அழைக்கப்பட்டு தமிழ், தெலுங்கில் கொடி கட்டி பறந்த ஹன்சிகாவுக்கு சில ஆண்டுகளாக நேரம் சரியியில்லை. அவர் நடித்த தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. தெலுங்கில் புதுப்படங்கள் புக் ஆகவில்லை. தனது தோழியின் கணவரை திருமணம் செய்தார். அந்த திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக அமையவில்லை. அவரை விவகாரத்து செய்யப்போகிறார் என தகவல்.
இதற்கிடையில் அவர் சகோதரர் மனைவியும் ஹன்சிகா மீது மும்பை போலீசில் கொடுமைப்படுத்துவதாக புகார் கொடுத்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜோசியம், கடவுள் நம்பிக்கை, பரிகாரத்தில் ஆர்வம் காண்பிப்பது பலரின் வழக்கம். அந்தவகையில் ஹன்சிகா மோத்வானி என்ற பெயரில், மோத்வானியில் நியூமராலஜிப்படி எக்ஸ்ட்ரா ஒரு ‛என்' ஐ சேர்த்து இருக்கிறார் ஹன்சிகா.
இதனால், தனது கஷ்டங்கள், பிரச்னைகள் மாறிவிடும் என அவர் நம்புகிறாராம். இதே ஹன்சிகா சில ஆண்டுகளுக்குமுன்பு ஹன்சிகா என்பது என் பெயர் மோத்வானி வேண்டாம் என்றார். பின்னர், மோத்வானியை சேர்த்துக் கொண்டார். மோத்வானி என்பது அவரின் தந்தை குடும்ப பெயர். அவர் முழுப்பெயர் பிரதீப் மோத்வானி. பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் தந்தையும், தாயும் பிரிந்துவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.