2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் வெளிவந்த 'காந்தாரா சாப்டர் 1' படம் இதுவரையில் 800 கோடி வசூலைக் கடந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் முதன் முதலில் 200 கோடியைக் கடந்த படம் என்ற சாதனையைப் படைத்தது. அடுத்து தெலுங்கில் 100 கோடி வசூலைக் கடந்து மற்றுமொரு சாதனையைப் படைத்திருக்கிறது.
இதற்கு முன்பு தெலுங்கில் வெளியான டப்பிங் படங்களில் 'கேஜிஎப் 2' படம் 100 கோடி வசூலைக் கடந்து, புதிய சாதனையை உருவாக்கியது. தற்போது 'காந்தாரா சாப்டர் 1' படம் அதே சாதனையைப் புரிந்த இரண்டாவது படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
தமிழகம், கேரளாவில் தலா 50 கோடி வசூலை இந்தப் படம் கடந்துள்ளது. தென்னிந்தியா மாநிலங்களில் மட்டும் 400 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளது.
2025ல் இந்திய அளவில் 800 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ள 'சாவா' ஹிந்திப் படத்தின் வசூலை 'காந்தாரா 1' இன்றைய வசூலுடன் முறியடித்துவிடும் எனத் தெரிகிறது.