2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண், பிரியங்கா மோகன் நடித்து வெளிவந்த 'ஓஜி' திரைப்படம் 300 கோடி வசூலித்து சாதனை புரிந்தது. அப்படம் வெளிவந்த பின் வெளியான சில படங்களுடன் ஒப்பிட்டுப் பேசினர்.
இதனிடையே, கன்னட இயக்குனரான சந்துரு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றால் இப்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அவர் இயக்கி, உபேந்திரா, சுதீப், சிவராஜ்குமார் மற்றும் பலர் நடிப்பில் 2023ல் 'கப்ஜா' என்ற கன்னடப் படம் வெளிவந்தது. அந்தப் படத்தின் சில காட்சிகளில் 'இன்ஸ்பயர்' ஆகி 'ஓஜி' படத்தை எடுத்துள்ளதாக சந்துரு கூறியிருந்தார்.
அது பவன் கல்யாண் ரசிகர்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரை சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள். 'கப்ஜா' படம் சரியாக ஓடவில்லை என்றாலும் ஒரு அதிரடியான ஆக்ஷன் படமாக இருந்தது. அதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்கப் போவதாக ஏற்கெனவே அதன் இயக்குனரும் அறிவித்திருந்தார்.