பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

கலா அல்லூரி இயக்கம், தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ‛பரிசு'. இதில் கதையின் நாயகியாக ஜான்விகா நடித்துள்ளார். இவருடன் ஜெய் பாலா, கிரண் பிரதீப், ஆடுகளம் நரேன், மனோபாலா (மறைவுக்கு முன் நடித்தது), சென்ராயன், சச்சு, அஞ்சலிதேவி, சின்ன பொண்ணு ஆகியோரும் நடித்துள்ளனர்.
சமூகத்தின் அனைத்து இடையூறுகளையும், நிராகரிப்புகளையும் கடந்து ஒரு பெண் நினைத்தால் சாதிக்க முடியும், எடுத்த காரியத்தில் வெற்றி பெற முடியும் என்று சொல்கிற கதை இது. சின்னச் சின்ன சலனங்களுக்கும் பருவக் கவர்ச்சிகளுக்கும் இடம் தராமல் லட்சியத்தை நோக்கிச் சென்று அடையும் ஒரு பெண்ணின் கதை இது.
கல்லூரி மாணவி, விவசாயம் செய்யும் பெண், ராணுவ வீரர் என்று மூன்று மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ளார் ஜான்விகா. மேலும் சண்டைக் காட்சிகளிலும் இவரே டூப் இல்லாமல் நடித்துள்ளார். வரும் அக்டோபர் 31ஆம் தேதி படம் வெளிவர உள்ளது.
இந்தப்படம் கல்லூரி மாணவிகளுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. மாணவிகளிடையே ஜான்விகா பேசும் போது, "இந்தப் படம் இன்று இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்குப் பிடிக்கும்" என்றார்.