மிஸ் யூ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | இயக்குனர் பாலாவிற்கு விழா | விவாகரத்து அல்லது பிரேக்கப் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் சிறந்த தருணம் ; ஐஸ்வர்ய லட்சுமி அதிரடி | வருகிறது 'புஷ்பா 3': சொல்லாமல் சொன்ன வைரல் புகைப்படம் | சைப் அலிகான் - நிகிதா தத்தா நடித்த ‛ஜூவல் தீப்' படப்பிடிப்பு நிறைவு | ‛இட்லி கடை' படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் 20 வயது தனுஷ் | ரொமான்ஸ் இல்லாத கணவர் ; பிரித்விராஜை கலாய்த்த மனைவி | கடைசி நேரத்தில் சன்னி லியோன் வருகைக்கு தடை போட்ட போலீசார் ; ரசிகர்கள் ஏமாற்றம் | மாலத்தீவில் பிகினி உடையில் உச்சக்கட்ட கவர்ச்சிக்கு சென்ற வேதிகா | போதும் மகளே.. அபர்ணா பாலமுரளியிடம் கையெடுத்து கும்பிட்ட தந்தை |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி வரும் படம் 'பரிசு'. ஸ்ரீ கலா கிரியேஷன்ஸ் சார்பில் கதை, திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் கலா அல்லூரி. திரைப்படக் கல்லூரியில் திரைப்பட தொழில்நுட்பம் கற்றுள்ள இவர் இயக்கும் முதல் படம் இது.
ஜான்விகா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். ஜெய் பாலா, கிரண் பிரதீப் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஆடுகளம் நரேன், சென்ராயன், சச்சு, அஞ்சலிதேவி, சின்ன பொண்ணு, பேய் கிருஷ்ணன், ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு ஒளிப்பதிவு சங்கர் செல்வராஜ், இசை ராஜீஷ்.
படம் பற்றி இயக்குனர் கலா அல்லூரி கூறியதாவது: நான் ஒரு பெண் இயக்குனர். பெண்கள் எல்லா துறையிலும் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதை வலியுறுத்தியே இந்த படத்தை உருவாக்கி உள்ளேன். கதைப்படி நாயகியின் தந்தை ஓர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. நான் மற்றவர்கள் போல் உன்னை டாக்டராக வேண்டும், இன்ஜினியராக வேண்டும் என்று கனவு காணவில்லை. நீ நம் நாட்டிற்குச் சேவை செய்யும் ராணுவத்தில் சேர வேண்டும் என்பதுதான் என் கனவு என்கிறார் தந்தை. மரணம் எப்போது வேண்டுமானாலும் வரும் அதை நாட்டுக்காக செய்வது பெருமை என்று சிறுவயதிலேயே உணர்த்துகிறார் அந்தத் தந்தை.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட அவரது மகள், அப்பாவின் விருப்பப்படியே ராணுவத்தில் சேர்கிறாள். ஒரு பெண்ணாகவும் ராணுவ வீரராகவும் அவள் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் தடைகளையும் அவள் எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுகிறாள் என்பதையும் கூறுவதே இந்தப் படம். ஒரு தந்தைக்கு மகள் அளிக்கும் பரிசு, நாட்டுக்குச் சேவை செய்வது என்ற கருத்தைச் சொல்கிறது இப்படம்.
நம் நாட்டில் பெண்கள் எல்லா துறையிலும் முன்னேறி வருகிறார்கள். அதற்குரிய வாய்ப்புகளை நமது அரசாங்கம் அளிக்கின்றது, அதைப் பின்பற்றி இன்றைய பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைக்கிறார்கள். அதிலும் முக்கியமாக ராணுவ துறையில் முன்னேறி வருகிறார்கள். இந்தப் படத்தின் பிரதான பாத்திரமான நாயகியும் தடைகளை மீறி சாதனை படைக்கிறாள்.
நாட்டுக்கான பாதுகாப்பு சேவை மட்டுமல்ல விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டும், நாடு தூய்மையாக இருக்க வேண்டும் என்கிற கருத்துகளும் படத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன. அதற்காக தூய்மை இந்தியா பற்றி ஒரு பாடலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. படத்தின் கதை மையம் கொள்ளும் பிரதான பாத்திரத்தில் ஜான்விகா நடித்துள்ளார். ஜான்விகாவுக்கு சினிமா மீது அபரிமித ஆர்வம். ஏராளமான முன் தயாரிப்புகளுடன் படத்தில் ஈடுபாட்டுடன் நடித்ததுடன் சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் சண்டை போட்டுள்ளார். இந்தப் படத்தில் கல்லூரி மாணவியாகவும், விவசாயம் செய்யும் பெண்ணாகவும், ராணுவ வீரராகவும் என்று மூன்று மாறுபட்ட தளங்களில் தனது நடிப்புத் திறமையைக் காட்டி உள்ளார்.
பெண்களைக் காட்சிப் பொருளாகக் காட்டும் திரைப்பட உலகத்தில் ஒரு பெண்ணை சாதனைப் பெண்ணாக்கி அப்பாத்திரத்தை பெருமையுடன் உயர்த்திப் பிடிக்கும் இந்தப் படம் நல்ல முயற்சி தான் என்பதைப் படம் பார்ப்பவர்கள் உணர்வார்கள். என்கிறார்.