கொரிய நடிகர்கள் ரசித்த 'தளபதி' பாடல் | ரஜினிகாந்த் எழுதும் சுயசரிதை: விரைவில் புத்தகம் வெளியாகிறது | பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது? யாரும் பேச மறுப்பதால் குழப்பம் | பிளாஷ்பேக்: தொலைக்காட்சி நிறுவனம் புறக்கணித்த கதை சினிமாவில் வெள்ளி விழா கொண்டாடியது | லோக்கல் டைம்ஸ்: 13ம் தேதி வெளியாகும் புதிய வெப் சீரிஸ் | கலையரசனின் 'கொலைச்சேவல்' 13ம் தேதி ரிலீஸ் | மரகதமலை: பெண் இயக்குனரின் பேண்டசி படம் | 'டெக்ஸ்லா' கதை இதுதானா? | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் ஜோடியாக நடிக்க மறுத்த சந்திரகாந்தா | பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் |

பாலுமகேந்திரா இயக்கிய 'மூடுபனி'தான் சைக்கோ திரில்லர் படத்தின் முதல் வழிகாட்டி. இதில் பிரதாப் சைக்கோ திரில்லராக நடித்திருந்தார். ஷோபா நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம்தான் பாலுமகேந்திரா&இளையராஜா ஜோடி உருவானது. அதன்பிறகு பாலுமகேந்திரா தான் இயக்கிய படங்கள் அனைத்துக்கும் இளையராஜாவையே இசை அமைக்க வைத்தார். 'சந்தியாராகம்' படத்திற்கு மட்டும் எல்.வைத்தியநாதன் இசை அமைத்திருந்தார்.
'அன்னக்கிளி'யில் அறிமுகமான இளையராஜாவுக்கு இந்தப் படம் 100வது படம். நான்கே ஆண்டுகளில் 100 படங்களை தொட்டிருந்தார் இளையராஜா. இந்த படத்தின் இசை அமைப்பின்போதுதான் திலீப் என்கிற சிறுவன் இளையராஜா குரூப்பில் கீ போர்டு பிளேயராக பணியில் சேர்ந்தார். அவர்தான் பிற்காலத்தில் ஆஸ்கர் விருதுகளையும் அள்ளிய ஏ.ஆர்.ரஹ்மான். அதேபோல குறுகிய காலத்தில், 17 வயதிற்குள் தேசிய விருது உயரத்தையும் அடைந்த ஷோபாவுக்கு இது கடைசி படமாக அமைந்தது.