சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

'பொன்னியின் செல்வன்' படத்தில் பூங்குழலியாக நடித்தவர் ஐஸ்வர்ய லட்சுமி. அதற்கு முன்பும், பின்பும் பல படங்களில் நடித்தாலும் பூங்குழலிதான் அவரது அடையாளமாக உள்ளது. தமிழில் 'ஜெகமே தந்திரம்' படத்தில் அறிமுகமானவர் அதன்பிறகு 'கார்கி, கேப்டன், கட்டா குஸ்தி, பொன் ஒன்று கண்டேன்' படங்களில் நடித்தார். தெலுங்கில் கோட்சே, அம்மு என இரண்டு படங்களில் நடித்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் தெலுங்கில் நடிக்கிறார்.
தெலுங்கு சினிமாவில் இளம் ஹீரோவாக வளர்ந்து வரும் சாய் துர்கா தேஜ் நடிக்கும் அவரது 18வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். ரோகித் கே.பி இயக்குகிறார். 'ஹனுமான்' படத்தை தயாரித்த பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்டின் சார்பில், கே.நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி தயாரிக்கின்றனர். பீரியட் ஆக்ஷன் படமாக தயாராகிறது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.