பிளாஷ்பேக்: ஒரு இயக்குநருக்கும், நடிகருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் உருவான முதல் நட்பு | 25 நாட்கள் பிரம்மாண்டமாக படமாக்கப்படும் கோபிசந்த் பட கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி | பாடகி ஜானகியின் மகன் மறைவு : பேத்தி வெளியிட்ட அறிக்கை | புதிய படங்களுக்குப் போட்டியான 'மங்காத்தா' ரீரிலீஸ் | கான்ஸ்டபிள் கனகம் வெப் சீரிஸின் 3வது சீசன் திரைப்படமாக வெளியாகிறது | மீண்டும் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கும் பறந்து போ நடிகை | துரந்தர் முதல் நாள் கலெக்ஷனை ஓவர்டேக் செய்த ‛பார்டர் 2' | கல்கி 2 படம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட தகவல் | ஜனவரி 30ல் திரைக்கு வரும் வடிவுக்கரசியின் க்ராணி! | ஆமா, அந்த பாபு யாரு...? : ரவி மோகனினிடம் கேட்கப்படும் கேள்வி |

நடிகை சாய் தன்ஷிகா தமிழில் மாஞ்சா வேலு, பேராண்மை, கபாலி, இருட்டு போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இது அல்லாமல் சில மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தி ப்ரூப் என்ற புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடன இயக்குனர் ராதிகா இந்த படத்தை இயக்கி உள்ளார். ரித்விகா, அசோக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகி வருகிறது. படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. அதில் சண்டைக் காட்சியில் ஒருவரது நெஞ்சில் தன்ஷிகா ஆவேசமாக கால் வைத்து நிற்பது போன்று அந்த போஸ்டர் காட்சி இடம் பெற்றுள்ளது. வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.