'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நடிகர் விஷால், சாய் தன்சிகா திருமணம் ஆகஸ்ட் 29ம் தேதி நடக்க உள்ளது. திருமணத்துக்கு பின்னரும் சாய் தன்சிகா நடிப்பார் என விஷால் கூறிவிட்டார். அவர் கதைநாயகியாக நடித்த 'யோகிடா' விரைவில் ரிலீஸ் ஆகிறது. அதில் அதிரடி போலீஸ் அதிகாரியாக வருகிறார். அடுத்து திரைப்பட கல்லுாரி மாணவர் அசோக்குமார் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கப்போகிறார்.
ஒருவர் ஆழ்மனதில் நிலவும் அமைதி மற்றும் மனோதத்துவ ரீதியாக அணுகுவதே இந்த படத்தின் கரு. தன்ஷிகாவுடன் கீதா கைலாசம், சிம்ரன் குப்தா உட்பட பலர் நடிக்கிறார்கள். அந்தமான் மற்றும் அதை சுற்றியுள்ள தீவுகளான ஜாலிபாய், டிகிலிபூர் ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடக்க உள்ளது. சமீபத்தில் நாகா இயக்கத்தில் தன்சிகா நடித்த 'ஐந்தாம் வேதம்' என்ற வெப்சீரியல் ஹிட்டானதும் குறிப்பிடத்தக்கது.