வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் | காவல் நிலையத்தில் நடக்கும் கதை | 'லெகசி' வெப் தொடரில் கேங்ஸ்டர் ஆக மாதவன் |

சாய் தன்ஷிகா நடித்துள்ள தெலுங்கு படம் 'அந்திம தீர்ப்பு'. இதில் அவர் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் 'சட்டம் என் கையில்' என்ற பெயரில் தமிழிலும் வெளியாகிறது.
இந்த படத்தை ஸ்ரீசித்தி விநாயகா மூவி மேக்கர் சார்பில் டி.ராஜேஸ்வர ராவ் தயாரித்துள்ளார். அபிராமு இயக்கியுள்ளார். விமலா ராமன், கணேஷ் வெங்கட்ராம், சத்ய பிரகாஷ், தீவாளி தீபு, நாக மகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். என்.சுதாகர் ரெட்டி ஒளிப்பதிவு செய்ய, கோட்டி இசை அமைத்துள்ளார். படம் நாளை வெளியாகிறது.
படம் பற்றி இயக்குனர் அபிராமு கூறும்போது "1978ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'சட்டம் என் கையில்' படத்தின் கதைக்கும், இப்படத்தின் கதைக்கும் சம்பந்தம் இல்லை. தலைப்பு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. எதை வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்கக்கூடிய சர்வசக்தி படைத்த ஜமீன்தாரின் குடும்பத்துக்கும், நீதிக்காக கடுமையாகப் போராடும் ஏழைப் பெண்ணுக்கும் நடக்கும் யுத்தம்தான் கதை. தனி நபராக சட்டத்தின் முன்பு போராடி, தனது கையால் தீர்ப்பு கொடுத்த வீரதீர பெண்ணைப் பற்றிய படம் இது" என்றார்.




