ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
விஜய் சேதுபதியின் 50வது படமான ' மகாராஜா' சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தை 'குரங்கு பொம்மை' புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தின் நாயகியாக மம்தா மோகன்தாஸ் நடித்துள்ளார். கடந்த ஒரு மாதமாக படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். ஆனால் படத்தில் அவர் உடற்பயிற்சி ஆசிரியை என்ற சிறிய கேரக்டரிலேயே நடித்திருந்தார். விஜய்சேதுபதி மகளுக்கு அவ்வப்போது உதவும் ஒரு ஆசிரியை என்ற வகையிலேயே அவரது கேரக்டர் அமைந்திருந்தது.
இதுகுறித்து படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "நன்றி சொல்வதைத் தவிர வேறு எதுவும் எனக்கு இப்போது பேசத் தோன்றவில்லை. இந்தக் கதைக்காக என்னைக் கூப்பிட்ட நித்திலனுக்கு நன்றி. என் கதாபாத்திரம் சிறிது பெரிது என்றில்லாமல் இந்த நல்ல கதையில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். விஜய் சேதுபதியின் 50வது படமான இதில் நானும் ஒரு அங்கம் என்பதில் மகிழ்ச்சி.
மலையாளத்தில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது. என் நடிப்பில் வெளியான சமீபத்திய எந்தப் படங்களுக்கும் இப்படியான வரவேற்பு கிடைக்கவில்லை. எனக்கும் படத்திற்கும் நல்ல வரவேற்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி'' என்றார்.