பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் | அங்கிளான என்னை அண்ணனாக மாற்றிவிட்டார் பஹத் பாசில் ; இயக்குனர் சத்யன் அந்திக்காடு பெருமிதம் | ரீல்ஸ் பைத்தியமாக நடிக்கும் வர்ஷினி வெங்கட் | பாலாஜி சக்திவேல் ஜோடியான வீடு அர்ச்சனா | விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக தானாகவே விநாயகர் சிலையை உருவாக்கிய பிரம்மானந்தம் | ஆஸ்கர் போட்டிக்கு தேர்வான மலையாள இயக்குனர் படம் | அமெரிக்காவிலிருந்து ஒன்றாக ஹைதராபாத் வந்திறங்கிய விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா | ‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! |
1927ம் ஆண்டு விக்டர் ப்ளெமிங் இயக்கிய அமெரிக்க மவுனப் படம் 'தி வே ஆப் ஆல் ப்ளெஷ்'. பிரிந்து சென்ற மகன்கள் பின்னர் ஒன்று சேர்வதுதான் கதை. இந்த மவுன படம் உலகம் முழுக்க பல மொழிகளில் திரைப்படமாகி வெற்றி பெற்றது. எம்ஜிஆர் நடித்த 'நாளை நமதே' படம்கூட இந்த படத்தின் அடிப்படையை கொண்டதுதான்.
1941ம் ஆண்டு இந்த கதை 'கழஞ்சி' என்ற பெயரில் இந்தியில் படமாகி பெரிய வெற்றி பெற்றது. இந்திப் படமாக இருந்தாலும் சென்னையில் 25 வாரங்கள் ஓடியது. இந்த படத்தை தமிழில் 1952ல் ஜெமினி ஸ்டூடியோ சார்பில் எஸ்.எஸ்.வாசன் 'மூன்று பிள்ளைகள்' என்ற பெயரில் தயாரித்தார். நாகேந்திர ராவ் இயக்கினார். இது ஒரே நேரத்தில் தெலுங்கில் 'முகுரு கொடுகுலு' என்ற பெயரிலும் உருவானது.
இந்த படத்தின் மூலம்தான் ஜெமினி கணேசன் அறிமுகமானார். சாவித்திரியும் அறிமுகமாகி இருக்க வேண்டிய படம். ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு நழுவிப்போனது. இந்த படம் தெலுங்கில் ஓரளவிற்கு வெற்றி பெற்றது. தமிழில் தோல்வியை தழுவியது.
இதற்கு காரணம் இந்த படத்தை தமிழ் மக்கள் இந்தி மொழியிலேயே பார்த்து விட்டார்கள் என்பதும் இந்த படத்திற்கு முன்பு இதே போன்ற கதை அமைப்பு கொண்ட 'அபூர்வ சகோதரர்கள்' (1949ல் வெளிவந்தது) படம் வெளிவந்ததும்தான் என்பார்கள். பெரும் தோல்வியை சந்தித்த இந்த படத்தின் 16 பெட்டிகளையும் எஸ்.எஸ்.வாசன் எரித்து விட்டதாகவும் சொல்வார்கள்.