'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் | அங்கிளான என்னை அண்ணனாக மாற்றிவிட்டார் பஹத் பாசில் ; இயக்குனர் சத்யன் அந்திக்காடு பெருமிதம் | ரீல்ஸ் பைத்தியமாக நடிக்கும் வர்ஷினி வெங்கட் | பாலாஜி சக்திவேல் ஜோடியான வீடு அர்ச்சனா | விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக தானாகவே விநாயகர் சிலையை உருவாக்கிய பிரம்மானந்தம் |
'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தின் மூலம் ' இயக்குனராக அறிமுகமானவர் மோகன்ஜி. அதனைத் தொடர்ந்து திரௌபதி படத்தை இயற்றினார். இந்த படம் வட மாவட்டங்களில் நடந்து வந்த நாடக காதலை அடிப்படையாக கொண்டு தயாராகி சர்ச்சையை கிளப்பியது. அதன் பிறகு 2021ம் ஆண்டு 'ருத்ர தாண்டவம்' என்ற படத்தை இயக்கினார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் நடிப்பில் 'பகாசுரன்' படத்தை இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் 'திரெளபதி' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதாக அறிவித்துள்ளார். நாயகனாக முதல் பாகத்தில் நடித்த ரிச்சர்ட் நடிக்கிறார். இது குறித்து அவர் தனது டுவிட்டரில் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ‛‛வீரசிம்ம காடவராயன்.., மீண்டும் திரெளபதியின் மிரட்டல் ஆரம்பம். தென்னகத்தை ஆண்ட ஹொய்சாள பேரரசன் மூன்றாம் வீர வல்லாளர் மற்றும் சேந்தமங்கலத்தை ஆண்ட காடவராயர்களின் வீரம், தியாகம், ஆகியவற்றுடன் வலி நிறைந்த ரத்த சரித்திரம் திரெளபதி2. விரைவில் திரையில் சந்திப்போம்''. என்று பதிவிட்டுள்ளார்.
முதல் பாகத்தின் கதைக்கும், இந்த கதைக்கும் தொடர்பில்லை. இது சரித்திர காலத்தில் நடந்த ஒரு ஜாதி மோதலை பற்றியது என்கிறார்கள்.