கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தற்போது திரைப்பட பணிகளிலும் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார். முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு வசனம் எழுதுகிறார். சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு படங்களுக்கு அவர்தான் வசனம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் ஜெயமோகன் எழுதிய 'கைதிகள்' என்ற சிறுகதை 'ரத்தசாட்சி' என்ற பெயரில் சினிமா ஆகியுள்ளது. இப்படத்தை ரபீக் இஸ்மாயில் இயக்கியுள்ளார், ஜாவேத் ரியாஸ் இசை அமைத்துள்ளார், ஜெகதீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் சார்லஸ் நடித்துள்ளனர். ஆஹா ஓடிடி தளத்திற்காக அனிதா மகேந்திரன் தயாரிக்கிறார்.
இதுகுறித்து ஜெயமோகன் கூறியிருப்பதாவது: இந்த கதையை படமாக்க மணிரத்னம் விரும்பினார். இயக்குனர் வெற்றி மாறன் இந்த கதையின் உரிமையை கேட்டார். ஆனால் இவர்கள் கேட்டதற்கு சில மாதங்களுக்கு முன்பு ரபிக் இஸ்மாயில் என்ற இளைஞர் என்னை சந்தித்து இந்த கதையை திரைப்படமாக்கும் உரிமையை பெற்றுச் சென்று விட்டார். அந்த கதைதான் ரத்தசாட்சி என்ற பெயரில் படமாகி உள்ளது. என்கிறார் ஜெயமோகன்.