பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

தமிழ், ஹிந்தி, பிரெஞ்ச், ஆங்கிலம் ஆகிய படங்களில் நடித்துள்ள தனுஷ் தெலுங்கில் அறிமுகமாகும் படம் 'சார்'. ஒரே சமயத்தில் தெலுங்கு, தமிழில் எடுக்கப்படும் இந்தப் படம் தமிழில் 'வாத்தி' என்ற பெயரில் டிசம்பர் 2ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. நாளை இந்தப் படத்தின் முதல் சிங்கிளான தனுஷ் எழுதிய 'வா வாத்தி' பாடல் வெளியாக உள்ளது.
'வாத்தி' படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்பு வெளியான சமயத்திலிருந்து அந்தப் படம் பற்றி தனுஷ் கண்டுகொள்ளவே இல்லை. அவர் நடித்து வெளியான 'திருச்சிற்றம்பலம்', அதற்கு அடுத்து வெளியான 'நானே வருவேன்' ஆகிய படங்களைப் பற்றி மட்டுமே சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்.
'வாத்தி' படம் பற்றிய அப்டேட்கள் தீபாவளி சமயத்தில் வந்த போதும், சில நாட்களுக்கு முன்பு முதல் சிங்கிள் பற்றிய அறிவிப்பு வந்த போதும் எதுவுமே பதிவிடாமல் இருந்தார். இந்நிலையில் நேற்று ஜிவி பிரகாஷ் உடன் இருக்கும் முதல் சிங்கிள் பற்றிய ஒரு வீடியோவை வெளியிட்டு தன் அப்டேட்டை கொஞ்சம் லேட்டாகப் பதிவிட்டிருந்தார்.
தொடர்ந்து அப்படத்தை தனுஷ் புறக்கணித்து வந்த நிலையில் நேற்று திடீரென டுவீட் செய்ததன் பின்னணித் தகவல் கசிந்துள்ளது. அப்படத்திற்காக தனுஷுக்கு 15 கோடி வரை சம்பள பாக்கி வைத்திருந்தார்களாம். அதில் 10 கோடியைத் தந்துவிட்டதாகவும் மீதித் தொகையை பட வெளியீட்டிற்கு முன்பாக தருவதாக தயாரிப்பு நிறுவனம் சொன்னதால் தனுஷ் 'வாத்தி' புரமோஷனில் இறங்கிவிட்டாராம். 'பாக்கி' வந்ததும் 'வாத்தி'க்கு வாசல் திறந்துவிட்டுள்ளார் தனுஷ்.




