சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
இந்திய தொழில் அதிபர்கள், சினிமா நட்சத்திரங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த விசாவின் மூலம் 10 ஆண்டுகளுக்கு அமீரக குடிமகன்போல் அங்கு வேலை பார்க்கலாம், தொழில் செய்யலாம். 10 ஆண்டுகளுக்கு பிறகு பிரச்சினை எதுவும் இல்லை என்றால் ரினீவல் செய்து கொள்ளலாம்.
இந்த விசாவை கமல்ஹாசன், பார்த்திபன், விஜய்சேதுபதி, சிம்பு, நாசர், மோகன்லால், மம்முட்டி, பிருத்விராஜ், சஞ்சய் தத், ஷாருக்கான், துல்கர் சல்மான், நடிகைகள் திரிஷா, காஜல் அகர்வால், மீனா, மீரா ஜாஸ்மின், அமலாபால், லட்சுமிராய், பிரணிதா, மீனா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது துபாய் சென்றுள்ள விக்ரமிற்கும் கோல்டன் விசா வழங்கி உள்ளனர். ஐக்கிய அமீரகத்தில் நடந்த விழாவில் இந்த விசா அவர்களுக்கு வழங்கப்பட்டது.