'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
திரவுபதி, ருத்ரதாண்டவம் என்கிற பரபரப்பான படங்களை இயக்கியவர் மோகன்.ஜி. ஒரு குறிப்பிட்ட ஜாதியை உயர்த்தி பிடிக்கும் படங்களை இயக்கி வருகிறார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு. இந்த நிலையில் அவர் இயக்கி உள்ள படம் 'பகாசூரன்'. இதில் செல்வராகவன், நட்டி நடித்துள்ளனர். படம் வருகிற 17ம் தேதி வெளிவருகிறது. இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டு இயக்குனர் மோகன் ஜி பேசியதாவது:
நான்தான் இந்த படத்தை தயாரித்துள்ளேன். தயாரிப்பாளராகும் ஆசை எனக்கு இல்லை. வேறு வழியில்லாமல் படத்தை தயாரிக்க வேண்டியதாயிற்று. பலரும் படத்தை முடிக்க உதவியாக இருந்தனர். இயக்குநராக வெற்றி பெற்றுவிட்டேன். தயாரிப்பாளராக வெற்றி பெறுவேனா என்பது மக்கள் கையில் உள்ளது. நல்ல படத்தை இயக்கியிருக்கிறோம். தரமான படமாக உருவாகியுள்ளது.
நானும் செல்வராகவனும் நிறைய பேசியிருக்கிறோம். செல்வராகவனைப் பார்த்துதான் நான் சினிமாவுக்கே வந்தேன். தினமும் அவரிடம் ஆசீர்வாதம் வாங்குவேன். நட்டி நட்ராஜை மனதில் வைத்துதான் படத்தை எழுதினேன். அவரும் வந்து நடித்திருப்பது மகிழ்ச்சி. இது அனைவருக்குமான படம். எந்த சமூகத்தையும் எதிர்த்து படம் செய்ய சினிமாவுக்கு வரவில்லை. நானும், பா.ரஞ்சித்தும் குறிப்பிட்ட சமூகத்தினரை மையப்படுத்தி படம் எடுப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். பா.ரஞ்சித்தின் படங்களை நான் டுவிட்டரில் பாராட்டிக் கொண்டு தான் இருக்கிறேன். நானும் அவரும் நண்பர்கள்.
சினிமாவில் நான் யாரையும் எதிரியாகவும், நண்பராகவும் பார்க்கவில்லை. சினிமாவில் சமநிலை வேண்டும். இனி வரும் படங்களில் என் பொறுப்புணர்வு அதிகரிக்கும். சமூக மாற்றத்தை கொண்டு வரும் படங்களை இயக்குவேன். சாதி இருக்கிறது என நான் சொல்லும்போது திட்டீனார்கள். வெற்றிமாறன் சொல்லும்போது பாராட்டுகிறார்கள். யார் சொல்வது என்பதுதான் இங்கே முக்கியம்.
இவ்வாறு அவர் பேசினார்.