ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
பழைய வண்ணாரப்பேட்டை, திரவுபதி, ருத்ரதாண்டவம் படங்களை இயக்கிய மோகன்ஜி இயக்கிய படம் 'பகாசூரன்'. இந்த படத்தில் செல்வராகவன், நட்டி, ராதாரவி, தாரக்ஷி, லாவண்யா, தேவதர்ஷினி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தனது நண்பர்களுடன் இணைந்து மோகன்ஜி தயாரித்திருந்தார்.
தன் மகளின் வாழ்க்கையை சீரழித்த கயவர்களை தேடிச் சென்று கொல்லும் ஒரு தெருக்கூத்து கலைஞனின் கதை. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல லாபத்தை கொடுத்த படம். கடந்த மாதம் 17ம் தேதி வெளியான படம் 25 நாட்களை தாண்டியும் ஒரு சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இரண்டாவது சிப்டிங்கில் பரவலாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனை படக்குழுவினர் கொண்டாடினார்கள். படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினார்கள் .