2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

வெங்கட்பிரபு இயக்கி வரும் நேரடி தெலுங்கு படம் 'கஸ்டடி'. இந்த படம் தமிழிலும் ஒரே நேரத்தில் வெளிவருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக கிர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ப்ரியாமணி , அரவிந்த் சாமி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, வெண்ணேலா கிஷோர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இணைந்து இசை அமைக்கிறார்கள். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் என்னாகும் என்பதுதான் கஸ்டடி படத்தின் ஒருவரிக்கதை என்கிறார்கள். தற்போது படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து அடுத்தகட்ட பணிகள் நடக்கின்றன. இறுதிகட்டத்தை அடைந்துள்ள படத்தின் டீசர் நாளை வெளிவருகிறது. படம் வருகிற மே மாதம் 12ம் தேதி வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.